செவ்வாய், டிசம்பர் 20, 2011

தமிழகத்தில் மலையாளிகள் தாக்கப்படுவது வேதனை: ஆனாலும் அணை கட்டுவோம்- சாண்டி

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் மலையாளிகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் வேதனை அளிப்பதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறியுள்ளார். இருப்பினும் முல்லை பெரியாறில் புதிய அணை என்ற முடிவில் இருந்து கேரளா பின் வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் சமூக ஆய்வு மையம் சார்பில்
முல்லை பெரியாறு அணை தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கினை முதல்வர் உம்மன்சாண்டி தொடங்கி வைத்து பேசியதாவது,

உலகளவில் தண்ணீர் கொடுப்பதில் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் முதன் முறையாக இப்போதுதான் தண்ணீர் தருகிறோம் என கூறிய பின்னரும் பிரச்சனை இருக்கிறது. முல்லை பெரியாறு நீர்மட்டத்தை குறைத்து அதில் இருந்து வெளியேறும் தண்ணீரை இடுக்கி அணைக்கு கொண்டு சென்று மின் உற்பத்தியை அதிகரிக்க கேரளா திட்டமிட்டுள்ளதாக தமிழக சட்டசபையில் கூறப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு எந்த மறைமுக நோக்கமும் கிடையாது. இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் முதலில் பேச்சு வார்த்தை நடத்திதான் தீர்வு காண வேண்டும். பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் தான் நீதி்மன்றத்துக்கு செல்ல வேண்டும். நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்காமல் தமிழக அரசுடன் பேச்சு வார்த்தைக்கு கேரளா தயாராகி வருகிறது.

முல்லை பெரியாறில் புதிய அணை என்ற முடிவில் இருந்து கேரளா பின் வாங்காது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் மலையாளிகள் மீது தாக்குதல் வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து கேரள தரப்பில் இருந்து புகார் கூறப்பட்டபோது தமிழக அதிகாரிகள் நல்ல ஓத்துழைப்பு கொடுத்து நடவடிக்கை எடுத்தனர். கேரளாவில் சில விருப்பதகாத செயல்கள் நடந்துள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக