திங்கள், ஏப்ரல் 07, 2014

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மீண்டும் புத்த தீவிரவாதிகள் தாக்குதல்!

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது புத்த தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். யங்கூனுக்கு அருகில் உள்ள ஹிகு நகரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்த தீவிரவாதிகள் முஸ்லிம்கள் மீது கல்வீசி தாக்கினர். முஸ்லிம்களின் வீடுகளையும், கடைகளையும் தீக்கிரையாக்கினர்.
ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.சம்பவத்தை கண்டித்து திரண்ட சிறுபான்மை மக்களும், புத்த தீவிரவாதிகளும் மோதலில் ஈடுபட்டனர். பல போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
கடந்த மாதம் ஜெர்மனியை மையமாக கொண்ட சர்வதேச சுகாதார குழுவை புத்தமதத்தைச் சார்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக