தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 29–ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கி நேற்று முடிவடைந்தது.
கடைசி நாளான நேற்று 25 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் நேரம் முடிவடைந்த 3 மணிக்கு முன்னதாக 15–க்கும் மேற்பட்டோர் வந்ததால் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு இரவு 7 மணி வரை தொகுதி தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான நந்தகுமார் வேட்பு மனுக்களை பெற்றார்.
வேட்பு தாக்கல் நடந்த 6 நாட்களில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, எஸ்.டி.பி.ஐ., தேசிய பார்வர்டு பிளாக், அகில இந்திய பார்வர்டு பிளாக், பகுஜன் சமாஜ் ஆகிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகள், மாற்று வேட்பாளர்கள் என மொத்தம் 59 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு.க.–அன்வர்ராஜா, தி.மு.க.– முகம்மது ஜலீல், காங்கிரஸ்–திருநாவுக்கரசர், பா.ஜ.க.–குப்புராமு, இந்திய கம்யூனிஸ்டு–உமாமகேசுவரி, அகில இந்திய பார்வர்டு பிளாக்–முத்துராமலிங்கம், தேசிய பார்வர்டு பிளாக்–அரசகுமார், எஸ்.டி.பி.ஐ.– நூர்ஜியாவுதீன் ,பகுஜன்சமாஜ்– சிவகுருநாதன் ஆகிய 9 கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் 25 சுயேச்சைகள், மாற்று வேட்பாளர்கள் என மொத்தம் 59 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக