மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான் நாட்டில் இத்தாலி தூதராக இருப்பவர் டேனியல் போஸ்கோ. இவர் விடுமுறையை கொண்டாடுவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றார்.
அவர் அங்கு சிறுவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டேனியல் போஸ்கோவை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்தனர்.
இதனை இத்தாலி நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆனால் அவர், சிறுவர்களுக்கான பாதுகாப்பை மீறி என்ன குற்றம் செய்தார் என்பது அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே இத்தாலி தூதர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக