செவ்வாய், ஏப்ரல் 08, 2014

தேனிலவில் மனைவி கொலை: இந்தியரை நாடு கடத்துகிறது இங்கிலாந்து

லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி வியாபாரி ஷிரியன் தேவானி (வயது 34). இவரது இந்திய–சுவீடன் மனைவி ஆனி (28). இவர்கள் தேனிலவுக்காக 2010–ம் ஆண்டு தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள கேப்டவுனுக்கு சென்றனர்.
அங்கு ஒரு வாடகை காரில் சென்றபோது ஆனி சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மங்கேனி என்பவரை வாடகைக்கு அமர்த்தி அவர் தனது மனைவியை கொலை செய்ததாக தெரியவந்தது.
மங்கேனிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். தேவானி மட்டும் மனநலம் சரியில்லை என்று கூறி லண்டனிலேயே இருந்தார். மனநலம் குணமாகாமல் அவரை விசாரணைக்காக தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பக்கூடாது என்று ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. இதனால் தேவானி (திங்கட்கிழமை) இரவு தென்னாப்பிரிக்காவுக்கு நாடு கடத்தப்படபட்டார் அங்கு அவர் நேராக கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு அவரது மனநிலை ஆராயப்பட்டு மனநலம் சரியில்லாமல் இருந்தால் அங்கேயே சிகிச்சை அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக