20 ஓவர் உலக கோப்பையில் பேட்டிங்கில் தகிடுதத்தம் போட்ட இந்திய வீரர் யுவராஜ்சிங்கின் வீடு மீது ரசிகர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹீரோ...ஜீரோ...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மிர்புரில் நடந்த இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி 2.1 ஓவர் மிச்சம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பை மகுடத்தை சூடியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வரை குவிக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், யுவராஜ்சிங்கின் மோசமான பேட்டிங்கால் ரன் வேகம் தடாலடியாக தடம்புரண்டது. அடித்து நொறுக்க வேண்டிய கட்டத்தில் பந்துகளை வீணாக்கிய யுவராஜ்சிங் 21 பந்துகளில் வெறும் 11 ரன் மட்டுமே எடுத்தார். அவரால் ஒரு பந்தை கூட எல்லைக்கோட்டை கடக்க வைக்க முடியவில்லை. 2007–ம் ஆண்டு உலக கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்சர் விளாசி உலக சாதனை படைத்த யுவராஜ்சிங்கா இப்படி ஆடுகிறார்? என்று ஒரு பக்கம் வியப்பு ஏற்பட்டதையும் மறுக்க முடியாது. அவரது சொதப்பலால் இந்திய அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 130 ரன்களே எடுக்க முடிந்தது. சிறிய இலக்கை இலங்கை அணி எளிதாக துரத்திப் பிடித்து விட்டது.
வீடு மீது கல்வீச்சு
யுவராஜ்சிங் ஆடிய விதத்தை கண்டு எரிச்சலும், ஆத்திரமும் அடைந்த சில ரசிகர்கள் இந்திய அணி தோல்வியை தழுவியதும் சண்டிகாரில் மனிமஜ்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் அருகே சென்று கோஷம் எழுப்பினர். பின்னர் அவர் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வும காயமும் ஏற்படவில்லை. இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனது மகனுக்காக குரல் கொடுத்துள்ள யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், ‘இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ்சிங் மட்டுமே காரணம் அல்ல, அவரை பலிகடா ஆக்கக்கூடாது. தோல்வி ஏற்படும் போது, நாலாபுறத்தில் இருந்தும் விமர்சனங்கள் வரும். ஏற்றமும், இறக்கமும் வாழ்க்கையில் மட்டுமல்ல, விளையாட்டிலும் சகஜம் தான்’ என்றார்.
மேலும் அவர், ‘1983–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் (50 ஓவர்) வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய அணி வீரர்களின் அறைக்கு வந்து வாழ்த்து தெரிவித்ததுடன், நீங்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர் என்று பாராட்டினார். அது தான் விளையாட்டிக்குரிய உண்மையான உத்வேகம். அது எப்போதும் முக்கியம்’ என்றும் யோக்ராஜ்சிங் சுட்டி காட்டினார்.அணியில் அவர் மட்டும அல்ல, மேலும் 10 வீரர்கள் இருப்பதை மறந்து விடக்கூடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக