திரிபுராவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு இன்றும் வரும் 12-ம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.
முதல் கட்டமாக மேற்கு திரிபுராவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
சில வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என்று வேட்பாளர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பின்னர், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
பகல் 12 மணி நிலவரப்படி, 12 லட்சத்து 46 ஆயிரத்து 794 (41 சதவீதம்) பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். சில சாவடிகளில் வாக்களிப்பதற்காக ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக