வடக்கு ஜோர்டானில் சாதரில் உள்ள சிரியா அகதிகள் தங்கியிருக்கும் முகாமில் கலவரம் நடந்தது.இதில் 22 ஜோர்டான் பாதுகாப்பு படையினருக்கு காயம் ஏற்பட்டது. அகதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை ஜோர்டான் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஏராளமான அகதிகள் காயமடைந்தனர்.கூடாரங்கள் மற்றும் வாகனங்களை தீவைத்துக் கொளுத்த முயன்ற அகதிகளை கலைக்க போலீஸ் கண்ணீர் புகையை பிரயோகித்தது.
1,06,000 சிரியா அகதிகள் இம்முகாமில் தங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட இம்முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றம் சாட்டி போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம். சிரியாவின் எல்லையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பாலைவனத்தில் இந்த முகாம் அமைந்துள்ளது. கிழக்கு கென்யாவில் ததாப் அகதி முகாமிற்கு அடுத்து உலகிலேயே மிகப்பெரிய அகதி முகாமாக சாதரி திகழ்கிறது.
சட்டவிரோதமாக முகாமை விட்டு வெளியேற முயன்ற அகதிகளை கைதுச் செய்ததை தொடர்ந்து கலவரம் வெடித்ததாக ஜோர்டான் அதிகாரியொருவர் தெரிவித்தார். ஆறு கூடாரங்களும், சில வாகனங்களும் தீக்கிரையாகின. போலீஸ் ஸ்டேஷன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரியொருவர் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக