வியாழன், ஏப்ரல் 03, 2014

இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி

மொத்தம் ரூ.1½ கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21–7, 21–9 என்ற நேர் செட்டில் சிமோன் பிருட்ஸ்ச்சியை (ஆஸ்திரியா) வெறும் 25 நிமிடங்களில் வென்றார். ஆனால் மற்றொரு இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 15–21, 21–12, 10–21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷிஸியான் வாங்கிடம் போராடி வீழ்ந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்திய வீரர் காஷ்யப் 21–12, 17–21, 21–12 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜெங்மிங் வாங்கை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். குருசாய் தத், சவுரப் வர்மா ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். அதே சமயம் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனாய், ஆனந்த் பவார், அஜய்குமார் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறினர்.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜூவாலா கட்டா– அஸ்வினி ஜோடி 21–19, 17–21, 21–14 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சயானிட்–முன்கிதமோர்ன் இணையை வீழ்த்தி முதல் தடையை வெற்றிகரமாக கடந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக