பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து, அவர்களின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வது என ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நேற்று முன்தினம்அறிவித்தது.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை கொண்ட ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் இந்தியா முழுவதும் இமாம்களுக்கான பொதுவான இயக்கமாகும். சமூகத்தை சீராக வழிநடத்திடவும், கலாச்சார சீர்கேடுகளில் இருந்து காத்திடவும் பாடுபட்டு வருகிறது.மேலும் சமூகத்தை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவரை கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுச் செயலாளர் மெளலவி ஷாஹூல் ஹமீது பாகவி, தமிழ் மாநில தலைவர் மெளலவி ஆபிருத்தீன் மன்பஈ, மாநில பொருளாளர் ஷம்சுல் ஹூதா பாகவி மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் மெளலவி தமீமுல் அனசாரி காஷிஃபா M.A ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக