தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பிரச்சினைக்குரிய கடல் எல்லைப்பகுதியில் பீரங்கி சண்டை நடந்தது. இது நடந்த சில மணி நேரத்தில், விளையாட்டு பொம்மை போன்ற தோற்றம் உடைய, ஆள் இல்லாத விமானம் ஒன்று, தென்கொரிய எல்லை தீவு ஒன்றில் விழுந்து நொறுங்கியது.
இதுகுறித்து உடனடியாக தென்கொரியா விசாரணை நடத்தியது.
அந்த விசாரணையில், விபத்துக்குள்ளான ஆளில்லாத விமானம், வடகொரியா பறக்க விட்ட விமானம் என கண்டறியப்பட்டுள்ளது. இது உளவு பார்ப்பதற்காக பறக்க விடப்பட்டதாகும்.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் தெரிவிக்க தென்கொரிய ராணுவம் மறுத்து விட்டது.
விபத்துக்குள்ளான விமானம், குண்டு வீச்சு நடத்தவும், பெரிய விமானங்களை கண்காணிக்கவும் உகந்தது அல்ல என்று தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக