புதுடெல்லி: சத்தீஷ்கர் மாநில பாஜக மூத்த தலைவரும், பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும் இருந்த கருணா சுக்லா காங்கிரஸில் இணைந்தார்.
சில ஆண்டுகளாக பாஜகவில் அதிருப்தியில் இருந்து வந்த இவர், கடந்த அக்டோபர் 25-ல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "பாஜக பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர், ஒரு கணவராக கடமையை நிறைவேற்றத் தவறியவர், ராஜதர்மத்தில் இருந்து விலகியவர், எப்படி முதல்வராக இருக்க முடியும்? அவர் நேர்மையற்றவர்" என மோடி குறித்து குற்றம் சாட்டினார்.
கருணா சுக்லா முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக