முஸ்லிம்களின் உயிரை பறித்து, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வாழ்விடங்களை இழக்கச் செய்த முஸஃபர் நகர் கலவரத்தை ஜாட் இனவெறியர்களுடன் இணைந்து சங்க்பரிவாரம் நடத்தியிருந்தது
. இந்நிலையில் இங்கு பிரச்சாரத்திற்கு வந்த உ.பி மாநில பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சார பொறுப்பாளரும். மோடிக்கு நெருக்கமானவருமான அமித் ஷா, பழிவாங்க விரும்புகிறீர்களா? பா.ஜ.கவுக்கு வாக்களியுங்கள் என்று வெறியூட்டியுள்ளார்.
அவர் கூறியது: “நமது தாயையும், சகோதரிகளையும் தரக்குறைவாக நடத்தியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இத்தேர்தல் அமைந்துள்ளது. நம்மை அவமானப்படுத்தியவர்களுக்கு உதவிய இம்மாநில அரசை தூக்கியெறியும் நேரம் நெருங்கிவிட்டது. மோடி பிரதமரான அடுத்த நாளே முலாயம் அரசு வெளியேற்றப்படும்.” என்று கூறியுள்ளார்.
மற்றொரு இடமான பண்ணை வீடு ஒன்றில் குர்ஜார், ரஜபுத்திர மற்றும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து பேசிய அமித் ஷா, பழிவாங்குவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. “ஒரு மனிதன் உணவில்லாமல், தூங்குவதற்கு இடமில்லாமல் கூட வாழலாம். ஆனால் அவமானப்படுத்தப்பட்டால் அவனால் வாழ முடியாது. நம்மை அவமானப்படுத்தியவர்களை நாம் பழிவாங்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
அதேபோல் கடந்த வியாழனன்று முஸஃபர் நகரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ராஜ்ஹார் என்ற கிராமத்தில் ஜாட் சமூகத்தினரிடம் பேசிய அவர் பழிவாங்குவது குறித்தே பேசியுள்ளார்.
அவரது இக்கருத்தை பா.ஜ.கட்சியும் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக