
அதில் ஒபாமாவுக்கும் தனக்கும் இருந்த காதல் மற்றும் உறவு பற்றி எழுதியுள்ளார்.
கடந்த 1980-ம் ஆண்டுகளில் நியூயார்க்கில் குக் தங்கியிருந்தார். அப்போது ஒபாமாவுக்கு 20 வயது இருக்கும். குக் இவரைவிட 3 வயது மூத்தவர். தொடக்கத்தில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருவரும் நெருக்கமாக பழகியதாகவும் அவர் எழுதியுள்ளார்.
இதுதவிர விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் நியூயார்க்கில் மேல்சட்டை எதுவும் அணியாமல் சராங்கு எனப்படும் நீண்ட துணியினால் ஆன உடையை அணிந்து ஒபாமா சுற்றி திரிவார் என்றும் தனது சுயசரிதை புத்தகத்தில் குக் கூறியுள்ளார்.
மேலும் அவர் அமெரிக்காவின் இனவெறியால் மிகவும் மனம் வருத்தம் அடைந்து இருந்தார். அதை எதிர்த்து போராடி வாழ்க்கையில் முன்னேறி அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியை அடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் மற்றும் சிகாகோவில் இளம்வயதில் தனக்கு ஏற்கனவே சில பெண் நண்பர்கள் இருந்ததாக ஒபாமா நாகரீகமாக ஒப்புக் கொண்டார். ஆனால் அவரது லீலைகள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளன.
இது 2-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்த நேரத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக