வெள்ளி, ஏப்ரல் 04, 2014

ஆம் ஆத்மி வேட்பாளர் உதயகுமாருக்கு முன்ஜாமீன்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். 
 
அரசின் தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக இவர் மீது, கூடங்குளம் போலீசார் ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்தனர். அந்த வழக்கில் போலீசார் வள்ளியூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளில் உதயகுமார் ஆஜராகாததால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

இந்த பிடிவாரண்டு அடிப்படையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று உதயகுமார், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
 
மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் உதயகுமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். உதயகுமார், கீழ்கோர்ட்டில் சரண் அடைந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இருநபர் ஜாமீன் பிணைய பத்திரம் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக