இந்தியா வந்துள்ள மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ், இந்தியாவில் அதிக செலவில்லாத நவீன கழிப்பறைகள் உருவாக்குவதே தனது கனவாகும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது:-வரும் ஆகஸ்டு மாதத்தில் அமெரிக்காவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக புகழ் பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களிடம் குறைந்த செலவில் நவீன முறையில், முற்றிலும் சுகாதாரமான வகையில் பயன்படுத்தப்படும் கழிப்பறைகள் அமைப்பது குறித்து ஆலோசனைகள் கேட்கப்படும். இதன் மூலம் எனது கனவு கழிப்பறைகள் திட்டம் நிறைவேறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நவீன கழிப்பறை மட்டுமல்லாது போலியோ, மலேரியா மற்றும் எச்.ஐ.வி இல்லாத உலகத்தை உருவாக்குவதும் தனது லட்சியம் என்று பில்கேட்ஸ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக