உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்பது போல், மத்திய, மாநில அரசுகள் போட்டிபோட்டு விலையை ஏற்றி, மக்களை ஏமாற்றுகின்றன,'' என, திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
தே.மு.தி.க., சார்பில், பெட்ரோல் விலை உயர்வில் மக்கள் விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து
, திருச்சி ஜங்ஷன் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம், காலை 11 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தே.மு.தி.க., நிறுவனத் தலைவர் விஜயகாந்த், 12.30 மணிக்கு தான் மேடைக்கு வந்தார். அதன்பின், ஆர்ப்பாட்டம் நடந்தது.தே.மு.தி.க., சார்பில், பெட்ரோல் விலை உயர்வில் மக்கள் விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து
பின், விஜயகாந்த் பேசியதாவது: "உரலுக்கு ஒரு பக்கம் இடியென்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி' என்பதுபோல், மத்திய, மாநில அரசுகள் போட்டிபோட்டு விலையை ஏற்றுகின்றன. எண்ணெய் நிறுவனம் விலை ஏற்றி விட்டதாக, மத்திய அரசும், மின்சார ஒழுங்கு முறை ஆணையமும், மின் கட்டணத்தை உயர்த்தியதாக, தமிழக அரசு கூறுகிறது. எண்ணெய் நிறுவனத்துக்கும், ஒழுங்குமுறை ஆணையத்துக்கும், நாம் ஓட்டளிக்கவில்லை. இவர்களை நம்பி தான் ஓட்டளித்தோம். யார் மீதோ பழிபோட்டு தப்பித்துக் கொள்கின்றனர்.
லாபத்தில் நஷ்டம் : அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோலுக்கு நிரந்தர விலை வைக்க வேண்டும். விலை நிர்ணயம் செய்தால், மக்கள் நிம்மதியாக இருப்பர். ஐந்து ஆண்டு இது தான் விலை என்று கூற வேண்டும். அதன்பின், ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ விலை உயர்த்த வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒரு லட்சத்து 3,000 கோடி ரூபாய் நஷ்டம் என்கின்றனர். வரி மூலம், ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கிறது. லாபத்தில் தான் நஷ்டம்.
வரியை குறைத்தால்... : ஒடிசாவில் 19 சதவீதம், டில்லியில் 18 சதவீதம், பெட்ரோலுக்கு மாநில அரசு வரி போடுகின்றன. தமிழகத்தில், 27 சதவீதம் வரி விதிக்கிறது. கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் வரி மூலம் வருவாய். அதில், 1,000 ரூபாய் மக்களுக்காக விட்டுக் கொடுக்கலாம். தமிழக அரசு வரியை குறைத்தால் பெட்ரோல் விலை, தமிழகத்தில் குறையும். ஜெயலலிதா மின் கட்டணம் உயர்த்தி, குறைத்தது போல், மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி குறைத்துள்ளது. ஆட்சிக்கு வந்ததும் மின் பிரச்னை தீரும் என்றார். கவர்ச்சித் திட்டங்களை தவிர்த்து, வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
என்னை சமாளிக்க 52 பேர் குழுவா? : திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தாக்கியும், அறிவுரை கூறியும் பேசியதாவது: தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க:
மக்கள் வரிப்பணத்தில் இந்தியா முழுவதும் தமிழக அரசு விளம்பரம் செய்கிறது. இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? கட்சி பணமா? இல்லை. மக்களின் வரிப்பணம்.
சட்டசபையில் யாரோ அமைச்சர் மூனுசாமியோ முனுசாமியோ பேசினாராம், "உங்க தலைவர் ஊரே சுத்தி வந்து பேசினாரு. எங்கம்மா ஒரு நாள் வந்து பேசுனதுக்கே சங்கரன்கோவிலில் ஜெயிச்சுட்டோம்' என்கிறார். 2004 லோக்சபா தேர்தலில் 40 தொகுதியிலும் உங்க அம்மா (ஜெயலலிதா) ஒரு தொகுதி விடாம அனைத்திலும் பேசினாரே? என்ன ஆச்சு? 40 தொகுதியிலும் தோத்தீங்க!
ஜெ.,வுக்கு பயம்: சங்கரன்கோவிலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நின்றபோது, 32 பேரை அனுப்புனீங்க. இன்று புதுக்கோட்டையில் நான் ஒரு ஆள் தான். 52 பேரை அனுப்புறீங்க. ஜெயலலிதாவுக்கு பயம். எனக்கு துளிகூட பயம் கிடையாது. நிலம் மூலம் கொள்ளையடித்தவர்களை உள்ளே தள்ளியுள்ளீர்கள். அதே நிலை தான் நாளை உங்களுக்கும் திரும்பும். இன்றைக்கு வெயில் காலம் முடிந்தும் வெயில் குறைந்ததா? நல்லவங்க யாரும் ஆட்சி செய்யலை. கெட்டவங்க தான் ஆட்சி செய்றாங்க. 2004ல் சுனாமி வந்தபோது, திருச்சியில் திருமண மண்டபம் எரிந்தபோது, கும்பகோணத்தில் பள்ளி எரிந்து குழந்தைகள் இறந்தபோது யாரோட ஆட்சி நடந்தது? இப்ப பூமி அதிர்வு, நில அதிர்வு வருகிறது. இப்ப யாரோட ஆட்சி நடக்குது? நல்லவங்க ஆட்சி இருந்தா இதெல்லாம் நடக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக