சனி, ஜூன் 02, 2012

1969ல் இருந்து இந்திய குடியரசு தலைவரை நியமிக்க கருணாநிதியிடம்தான் ஆலோசனை கேட்கப்படுகிறது. கனிமொழி !

Karunanidhi is a main person to select president of India. Kanimozhiஇந்திய அரசியலை நிர்ணயிக்கக் கூடியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி புகழாரம் சூட்டினார்.திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி திமுக மகளிரணி சார்பில் பிறந்த நாள் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை
நடைபெற்றது.

விழாவில் கனிமொழி பேசியதாவது: இந்திய அரசியலை நிர்ணயிக்கக் கூடியவர் கருணாநிதி. 1969-ல் இருந்து குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் கருணாநிதி முக்கிய பங்கு வகித்து வருகிறார். இப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதையும் முதலில் கருணாநிதியிடம்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஆலோசனை கேட்கப்பட்டது.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேசும்போது பழைய விவகாரங்களைப் பேசி, சிறிது மெüனம் காத்தார். அதுவே பெரிய விவகாரமாக நாடு முழுவதும் அலசி ஆராயப்பட்டது என்றால் அவரின் மெüனமும், ஒற்றைச் சொல்லும்கூட நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சமூகத்தில் தன்னலம் இல்லாமல் உழைத்தவர்கள்தான் மறக்க முடியாத தலைவர்களாக உள்ளனர். காந்தி, மண்டேலா, அம்பேத்கர், பெரியார், அண்ணாவை யாரும் மறக்க மாட்டார்கள். அந்த வகையில் தன்னலமற்று உழைக்கும் தலைவர் கருணாநிதி என்றார் கனிமொழி.

ரசித்த கருணாநிதி: விழாவில் பாரதிதாசன், கருணாநிதி எழுதிய பாடலுடன் கூடிய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கருணாநிதி, துணைவியார் ராசாத்தியுடன் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து ரசித்தார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமி உள்பட பலர் நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்தனர்.

விழாவில் துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், எஸ்.பி.சற்குணபாண்டியன், மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மகளிரணித் தலைவர் நூர்ஜஹான் பேகம், துணைத் தலைவர் விஜயா தாயன்பன் உள்ளிட்டோர் கருணாநிதியின் சிறப்புகளைப் பாராட்டி பேசினர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக