சனி, ஜூன் 02, 2012

முதல்வர் பதவிக்கு எதிராக சதி செய்த 2 அமைச்சர்கள் நீக்கம்: நவீன் பட்நாயக் அதிரடி !

முதல்வர் பதவிக்கு எதிராக சதி செய்த 2 அமைச்சர்கள் நீக்கம்: நவீன் பட்நாயக் அதிரடிஒடிசா மாநில முதல்வர் பதவியிலிருந்து நவீன் பட்நாயக்கை நீக்குவது குறித்து சதி செய்த இரண்டு அமைச்சர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.ஒடிசா மாநிலத்தில் பிஜு ஐனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு எதிராக மொகோபாத்ரா தலைமையில் அதிருப்தி குழு ஒன்றும் இருக்கிறது.
 
நவீன் பட்நாயக் லண்டனுக்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த மொகோபாத்ரா தனக்கு சாதகமான அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் கடந்த செவ்வாய்க்கிழமை, ஒன்று கூட்டி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
 
இக்கூட்டத்தின் முடிவில் நவீன் பட்நாயக்கை முதல்வர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து தகவலறிந்த நவீன் பட்நாயக் லண்டனிலிருந்து உடனடியாக ஓடிசா திரும்பியுள்ளார்.
 
கட்சியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் மொகோபாத்ரா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பட்நாயக்கிற்கு எதிராக சதி செய்த அஞ்சலி பெகேரே, சஞ்சீவ் சாஹூ ஆகிய இரண்டு அமைச்சர்களும் கட்சியிலிருந்து நீக்கப்படுவந்தாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் சில எம்.எல்.ஏக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 
பட்நாயக்கிற்கு எதிராக சதி செய்த விவகாரம் ஒடிசா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக