வியாழன், ஏப்ரல் 03, 2014

மாயமான மலேசிய விமானம்: சவால்களுக்கு இடையே தொடரும் தேடல்!

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரி அந்தப் பணியை மிகப் பெரும் சவால் என்று கூறியுள்ளார்.


ஆஸ்திரேலியக் கடற்பரப்புக்கு அப்பாலுள்ள பகுதிகளில் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளவர்களை ஒருங்கிணக்கும் அதிகாரியான ஆக்னஸ் ஹூஸ்டன் தனது வாழ்க்கையில் இதுவரை சந்தித்துள்ள மிகப் பெரிய சவால் இதுதான் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணியில் 11 விமானங்கள், 9 கப்பல்கள் ஆகியவை இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் ஈடுபட்டிருந்தாலும் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை என்று ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவரான ஆக்னஸ் ஹூஸ்டன் கூறுகிறார்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் மாயமான மலேசிய விமானத்தின் எந்த சிதிலங்களும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. பெர்த் நகருக்கு மேற்கே சுமார் மூவாயிரம் கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்று வரும் இந்தத் தேடுதல் நடவடிக்கையை மீளாய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் ஆக்னஸ் ஹூஸ்டன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இருப்பதை தவர்க்கும் நோக்கில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விமானம் ஒன்றை விமானக் கட்டுப்பாட்டு அறையாக பயன்படுத்தவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக