வெள்ளி, ஏப்ரல் 04, 2014

தீவிரவாதம் என்ற பெயரில் அந்நிய நாட்டில் அத்துமீறும் அமெரிக்க:சொந்த நாட்டில் தீவிரவாதத்தை கட்டுபடுத்தாதது ஏன்?

அமெரிக்க ராணுவ தளத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 4 பேர் உயிர் இழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு
ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தில் 2011–ம் ஆண்டு பணியாற்றியவர் இவான் லோபஸ் (வயது 34). பின்னர் அவர் அங்கிருந்து நாடு திரும்பி விட்டார். டெக்சாஸில் வேறொரு ராணுவ தளத்தில் பணியாற்றி விட்டு, ‘போர்ட் ஹூட்’ ராணுவ தளத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர், ‘போர்ட் ஹூட்’ ராணுவ தளத்துக்கு ராணுவ சீருடை அணிந்து கொண்டு காரில் சென்றார்.

நேராக மருத்துவப் பணியாளர்கள் தங்கியுள்ள நிர்வாகக் கட்டிடத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது ‘45 காலிப்ரே செமி ஆட்டோமேட்டிக்’ ரக கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். உடனே காரில் ஏறினார். அடுத்து போக்குவரத்து படைப்பிரிவினர் இருந்த கட்டிடத்துக்கு சென்றார். அங்கும் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவரை ராணுவ போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தினார். அப்போது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடந்தது என்ன?
நடந்தது என்ன என்பது பற்றி ராணுவ தளத்தின் தளபதி மார்க் மில்லே நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்தத் துப்பாக்கிச்சூட்டினை நடத்திய வீரர் இவான் லோபஸ், ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தில் 2011–ம் ஆண்டு பணியாற்றியவர் ஆவார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகள் பெற்றுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில்  உள்நோக்கம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. 

இது தீவிரவாதம் தொடர்பான சம்பவமும் அல்ல.  ராணுவ போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்திய போது அவருடனும் லோபஸ் மோதி உள்ளார். பின்னர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர் இழந்து இருக்கிறார்.2009–ம் ஆண்டு இதே ராணுவ தளத்தில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர். 

ஒபாமா கண்டனம்
‘போர்ட் ஹூட்’ ராணுவ தள துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிகாகோ நகரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருக்கிறது என அறிந்தபோது, நமது இதயம் உடைந்து போனது. என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்ற வாக்குறுதியை வழங்குகிறேன். சுதந்திரத்துக்காக ‘போர்ட் ஹூட்’ ராணுவ தளம் நிறைய தியாகங்களை செய்திருக்கிறது. அந்தக் குடும்பங்களை நான் அறிவேன். அவர்களது வியக்கத்தக்க சேவையை அறிவோம். சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களோடு நமது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இருக்கும்’’ என கூறினார்.


சிகோகோவில் இருந்து வாஷிங்டன் திரும்பியதும் ஒபாமா, ராணுவ மந்திரி சக் ஹேகல், உயர் ராணுவ அதிகாரிகள், உளவுப்படை (எப்.பி.ஐ.) அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் ‘போர்ட் ஹூட்’ ராணுவ தள துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அவர் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக