வடகொரியா நாட்டு அதிபராக கிம் ஜாங் யூன் பதவி வகிக்கிறார். கடந்த ஆண்டு
ராணுவ மூத்த தளபதியாக இருந்த அவரது தாய் மாமா சோங் தாயிக் மரண தண்டனை
விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதை அடுத்து சோயி ரியாங் ஹா என்பவர் ராணுவ
துணை மார்ஷலாக நியமிக்கப்பட்டு அதிபருக்கு அடுத்த இடத்திற்கு
உயர்த்தப்பட்டார். இவர் சிறப்பு தூதராக சீனாவுக்கு சென்று திரும்பினார்.
இந்நிலையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இவர் அதிபர் கிம் ஜாங்குடன்
இருக்கும் படம் வெளியானது. அதில் ஷோயி ரியாங் ஹா சற்று சிரித்துக்கொண்டு
காட்சி தருகிறார். ஆனால் கேலிக்குரியவர் போல நிதானம் இல்லாதவர் போல
இருந்தார். ஆகவே முக்கிய பொறுப்புகளில் இருந்து அவரும் நீக்கப்பட்டு
இருக்கலாம் என்று புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
இதுபற்றி சியோல் நகருக்கு
அருகே வசிக்கும் வடகொரியா நிபுணர் செயாங்சாங் கூறுகையில், ‘ஷோயி காவலில்
வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. வடகொரியாவுக்குள் என்ன
நடக்கிறது என்பதே கண்டுபிடிக்க இயலாது. ஆகவே இந்த வதந்தி உண்மையா? என்பதை
உறுதி செய்வது கடினம்’ என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக