சனி, மார்ச் 08, 2014

முன்னாள் மலேசிய பிரதமர் விடுதலை செல்லாது மலேசியா மேல்முறையீடு கோர்ட் தீர்ப்பு


மலேசியாவின் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான  அனவர் இப்ராஹிம் இவர் தனது ஆண் உதவியாளருடன் ஹோமோ செக்ஸ் உறவு வைத்து கொண்டார் என குற்றம்சாட்டபட்டது. மலேசிய சட்டபடி இது கிரிமினல் குற்றமாகும் . இது தொடர்பாக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என கோர்ட் தீர்ப்பளித்தது இதை எதிர்த்து  அரசு மேல் முறையீடு செய்தது. தற்போது கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


அன்வர் இப்ராஹிம் மீதான குற்றச்சாட்டை கைவிடுவது என முந்தைய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த  முடிவு தவறு என வாதிட்டு தற்போதைய  அரசு செய்திருந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.


அரசியல் உள்நோக்கங்களுக்காக அனவர் மீது குற்றம் சாட்டபட்டுள்ளது என்றும், அவருடைய அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மலேசியாவின் உச்சநீதிமன்றத்தில் அன்வர் இப்ராஹிமின் வக்கீல்கள்  மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக