பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று
கூறினாலும் 9 வயதான சிறுமி ஒருவர் அச்சமின்றி அபாயகரமான பாம்புகளுடன் பழகி
வருகிறார். செல்லப்பிராணிகளைப் போல அவற்றை வீட்டிலும் வளர்த்து வருகிறார்.
அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 9 வயதான கிறிஸ்டா குவாரினோ
என்ற பள்ளி செல்லும் சிறுமியே பாம்புகள் மீது அதீத விருப்பம் கொண்டு
அவற்றுடன் இப்படி வாழ்கிறார். சிறு வயதாக இருந்தாலும் பாம்புகளை எவ்வாறு
கையாள வேண்டும் என்பதை தெளிவாக கற்றுத் தேர்ந்துள்ளார் கிறிஸ்டா.இவர் தனது வீட்டில் ஒரு அனகோண்டா, 12 மலைப்பாம்புகள் உள்பட 30 வகையான ஊர்வனவற்றை வளர்த்து வருகிறார். அவற்றுடன் சாப்பிடவும், உறங்கவும், விளையாடவும் செய்கிறார் கிறிஸ்டா. ஊர்வன இன வல்லுநரான கிறிஸ்டாவின் தந்தை ஜெமியே கிறிஸ்டாவுக்கு 2 வயதாக இருக்கும்போது பாம்புகளை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
தந்தையும் மகளும் தற்போது வார இறுதியில் உலகிலேயே மிகவும் நஞ்சு வாய்ந்த ராடில் பாம்பை தேடி வருகின்றனர். தங்களது பாம்பு நேசத்தை படம் பிடித்து ‘யூடிப்’பிலும் தரவேற்றம் செய்து மகிழ்கின்றனர்.
கிறிஸ்டாவை சில தடவைகள் பாம்பு தீண்டியுள்ளபோதிலும், ‘பாம்புகளுக்குச் சிலர் பயப்படுகின்றனர். அவற்றை கொல்ல நினைக்கின்றனர். ஆனால் அவை அமைதியானவை, ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஒருநாள், உலகின் ஒவ்வொரு வகை ஊர்வனவற்றையும் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்’’ என்று கூறித் திகைக்க வைக்கிறார் கிறிஸ்டா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக