சனி, மார்ச் 15, 2014

தேர்தலில் கருப்புப் பணத்தை தடுக்க வருமான வரித்துறை அதிரடி


பொதுவாக தேர்தல்களின் போது அதிகளவில் பணப்புழக்கங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே வருகிற மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்திய வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக புதுடெல்லியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.



இதன் அடிப்படையில் புகார்களை பெறுவதற்கு திரையுடன் கூடிய தனிகட்டுப்பாட்டு அறை தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் கருப்புப்பணம் புழங்குவது பற்றி மக்கள் தகவல் அறிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 1800110132. இந்த எண் 24 மணி நேரமும் ஒரு இணை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்றும் கணினிமயமாக்கலின் அடிப்படையில் தேர்தலின் போது நடக்கும் கருப்புப்பண புழக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என்றும் அவ்வமைப்பை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக