தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை படுகொலை செய்த வழக்கில், எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கெய்ரோ ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. இதையடுத்து, உள்துறை அமைச்சக மருத்துவ குழுவை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயிலில் அவரை கடந்த திங்கட்கிழமை அவருடைய மனைவி மற்றும் 2 மருமகள்கள் சந்தித்தனர். அதன்பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் சாப்பிட மறுத்து விட்டார். அதையடுத்துதான் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக