வியாழன், ஏப்ரல் 10, 2014

குஜராத் கலவரத்துக்கு காரணமானவர்களை தோற்கடியுங்கள்!-அலிகார் பல்கலை ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்!

குஜராத் கலவரத்துக்கு காரணமானவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டும்.அதற்கேற்ப முஸ்லிம்கள் சாதுர்யமாக வாக்களிக்கவேண்டும் என்று அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இவ்வமைப்பின் கெளரவச் செயலாளரான இணைப் பேராசிரியர் டாக்டர் அப்தாப் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:”மதவாத, ஆதிக்க சக்திகள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டும். குஜராத், முஸஃபர் நகர் கலவரத்துக்கு காரணமானவர்கள், நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள். அவர்கள் தோல்வி அடையும் வகையில் முஸ்லிம்களும், மதச் சார்பற்ற வாக்காளர்களும் சாதுர்யமாக வாக்களிக்கவேண்டும்.
மதவாத மோடியையும், போலி மதவாத முலாயம்சிங்கையும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தோற்கடிக்கவேண்டும்.
நடந்த சம்பவத்துக்கு மோடி இதுவரை வருந்தவில்லை. முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் முஸ்லிம்கள் 15 முகாம்களில் அச்சத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்யவில்லை.
முஸ்லிம்களின் முதல் முக்கியத்துவம் அவர்களின் பாதுகாப்புதான்.அதை உறுதிச் செய்து பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குபவர்களுக்கே முஸ்லிம்களின் வாக்கு கிடைக்கும்”.என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட இந்திய முஸ்லிம்கள் இடையே அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக