வியாழன், ஏப்ரல் 10, 2014

92 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு

மக்களவை தேர்தலில் 3ம் கட்டமாக 11 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 92 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், முக்கிய தலைவர்களின் வெற்றி, தோல்வி முடிவு செய்யப்படுகிறது. மக்களவைக்கு ஏப்ரல் 7 முதல் மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 

இதில், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதியும், மேகாலயா, அருணாச்சல பிரதேசங்களில் உள்ள தலா 2 தொகுதிகள், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் உள்ள தலா ஒரு தொகுதிகளுக்கு நேற்றும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து, 3ம் கட்டமாக டெல்லி, மகாராஷ்டிரா, காஷ்மீர், சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தர பிரதேசம், கேரளா, பீகார், மத்திய பிரதேசம், அரியானா, ஒடிசா உட்பட 11 மாநிலங்கள், சண்டிகர், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 92 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. இன்று தேர்தலை சந்திக்கும் 1,418 வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை 11 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக