புதன், ஏப்ரல் 09, 2014

ஏர்வாடியில் தே.மு.தி.க. வேட்பாளரை மறித்த 60 பேர் மீது வழக்கு

நெல்லை பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிவனணைந்த பெருமாள் நேற்று கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் ஏர்வாடி பகுதியில் பிரசாரம் செய்து வந்தார். அவரது பிரசார வாகனம் முகைதீன் நகருக்குள் நுழைய முயன்ற போது அந்த பகுதியை சேர்ந்த த.மு.மு.க. நகர தலைவர் பக்ருதீன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு வந்து, இங்கே பிரசாரம் செய்ய கூடாது என்று பிரசார வாகனத்தை மறித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு ஏர்வாடி போலீசார் விரைந்து வந்து தே.மு.தி.க. பிரசார வாகனத்தை வேறு பகுதியில் பிரசாரம் செய்ய செல்லுமாறு திருப்பி அனுப்பினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க.வை சேர்ந்த விஜி கணேசன், பி.ஜே.பி. நிர்வாகி சேர்மத்துரை தலைமையில் அவர்களது ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்தனர். சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பினர்.

இந்த பிரச்சினை தொடர்பாக தே.மு.தி.க. பிரசார வாகனத்தை மறித்ததாக பக்ருதீன் உள்பட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக