மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்று 24 வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிரது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
அந்த மிதக்கும் பொருட்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அது மீன் பிடி சாதனங்கள் என்று தற்போது கண்டறியப்பட்டு உள்ளது.
மாயமான மலேசிய விமானத்தில் இருந்து துணை விமானி கடைசியாக, ‘‘ஆல் ரைட் குட்நைட்’’ என்று பேசியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அந்த விமானத்தில் இருந்து கடைசியாக ‘‘ குட்நைட் மலேசியன் 370 ’’ என்ற வாசகம் கேட்டதாகவும் இதை யார் பேசியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மலேசியா நேற்று அறிவித்தது.
இதற்கிடையே, அந்த விமானத்தில் சென்றவர்களின் உறவினர்கள், மலேசியா அரசு இன்னும் சரியான தகவல்களை தராமல் மறைக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.விமானம் மாயமானதில் இருந்து மலேசிய அதிகாரிகள் முரண்பாடான தகவல்களை அளிப்பதாக விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில், விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை அழைத்து விரிவான தகவல்களை அதிகாரிகள் நாளை அளிக்க உள்ளனர். இந்த அழைப்பின்போது, மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களும் கலந்து கொண்டு விரிவான விளக்கம் அளிக்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக