உக்ரைன் நாட்டில் ரஷிய ராணுவம் குவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பிரதமர்களுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார். உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, ரஷியாவின் அனுதாபியாக இருந்த விக்டர் யானுகோவிச் தூக்கி எறியப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ரஷியா, உக்ரைனின் கிரீமியா என்ற இடத்தை கைப்பற்றி, அங்கு தனது ராணுவத்தை குவித்தது.
இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என உக்ரைன் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து, ராணுவத்தை திரும்ப பெறும்படி ரஷியாவிற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தார்கள். இதனை ரஷியா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் உக்ரைன் விவகாரம் குறித்து நேற்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், போலந்து அதிபர் பரோனிஸ்லாவ் கொமோரோவ்ஸ்கி ஆகியோருடன் ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார். இதில், இரு நாடுகளும் உடனடியான பேசி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக