ஜப்பானில் இன்று அதிகாலை 5:11 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 என பதிவாகியுள்ளது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினா தீவில் பூமிக்கு அடியில் 120 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
நில அதிர்வின் காரணமாக கடற்கரையை ஒட்டியுள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. மக்கள் பீதியடைந்து தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். சேதம் குறித்த தகவல்கள் ஏதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக