கூடங்குளம் அணுமின் நிலைய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அவருடன் போராட்ட குழுவை சேர்ந்த மைபா.ஜேசுராஜும் ஆம் ஆத்மியில் சேர்ந்தார். இருவரும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் அரசியலில் ஈடுபட்டிருப்பதற்கு போராட்ட குழுவை சேர்ந்த புஷ்பராயன், முகிலன் போன்றோர் உதயகுமாரின் அரசியல் பிரவேசத்தை கண்டித்து உள்ளார்கள்.
அரசியல் கலப்பு இல்லாமல் போராட்டத்தை நடத்தி செல்லவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதேபோல இடிந்தகரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரும் உதயகுமார், புஷ்பராயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். போராட்ட களத்தில் இருந்து வருகிற 5–ந்தேதிக்குள் உதயகுமார் வெளியேற வேண்டும் என்று போராட்டகுழுவினர் கெடு விதித்து உள்ளனர்.
இதனால் உதயகுமார் இடிந்தகரையில் இருந்து வெளியே வந்து அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார் என தெரிகிறது. கன்னியாகுமரி தொகுதியில் அவர் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட உள்ளதால் குமரி மாவட்டத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தவும், மக்களை சந்திக்கவும் உதயகுமார் திட்டமிட்டு உள்ளார். இதையடுத்து அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு புஷ்பராயன் தலைமை ஏற்று நடத்துவார் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக