சனி, மார்ச் 08, 2014

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 90 லட்சம் ஐரோப்பிய பெண்கள்




உலகில் உள்ள பெண்களில், 10 பேரில் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், அவர்களில் பாதி பேர் தான் புகார் அளிப்பதாகவும், ஐரோப்பிய யூனியன் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதற்காக, 42 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

ஐரோப்பிய யூனியனை சேர்ந்த, 28 நாடுகளில் மட்டும், 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் மீது, பல வகையான பாலியல் கொடுமை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில், 7 பேரில் ஒருவர் மட்டும் தன் குடும்பத்தாரிடமும், போலீசிலும் தெரிவித்துள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, 15 முதல், 74 வயது வரையுள்ள பெண்களிடம் நடத்திய நேரடி ஆய்வு அறிக்கையை, ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ளது. பதினைந்து வயதிற்கு கீழுள்ள பெண்களில், 20 பேரில் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இவர்களில், 12 சதவீதத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டதை தெரிவித்துள்ளனர்.

 உறவினர்களால், 27 சதவீத குழந்தைகள், செக்ஸ் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். முன்னாள் மற்றும் இந்நாள் கணவர்களால், கொலை மிரட்டல், சுதந்திரத்தில் தலையிடுதல் மற்றும் அவமானப்படுத்துதல் போன்ற மன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக, 43 சதவீத பெண்கள் கூறியுள்ளனர். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மட்டும், 90 லட்சம் பெண்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக