சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இந்தர்ஜித் சிங்(36). மது குடிபோதைக்கு அடிமையான அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். அதை மனைவி மறுத்தும் அவர் ஏற்கவில்லை. ஒருநாள் குடிபோதையில் வீடு திரும்பிய அவர் இரும்பு குழாயால் மனைவியை தாக்கினார். அதில் அவருடைய தோள்பட்டை எலும்பு, கைவிரல் முறிந்தன.
இதையொட்டி தொடரப்பட்ட வழக்கை சிங்கப்பூர் கோர்ட்டு நீதிபதி விசாரித்து இந்தர்ஜித் சிங்குக்கு 12 வாரம் ஜெயில் தண்டனை விதித்தார். போலீஸ்காரரிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட இன்னொரு வழக்கிலும் அவருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக