தனி ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்க முடியாது என மத்திய அரசு
அறிவித்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் முதல்வர்
ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதில், தமிழ் ஈழம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர்களிடையே பொது
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கையை ‘நட்பு நாடு' என
அழைக்கக்கூடாது என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்
என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ஒரு
தனியார் டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசின் தீர்மானங்களை
ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக