புதன், மார்ச் 20, 2013

முகப்பு செய்திகள் » விமர்சனங்கள் தொடர்கள் » கட்டுரைகள் » மற்றவை » எங்களைப் பற்றி தொடர்புக்கு இன்திஃபாழாவை சீர்குலைத்து கருணைக் கொலைச் செய்யும் வெடிக்குண்டுதான் ஓஸ்லோ ஒப்பந்தம்!

தோஹா: தொன்னூறுகளில் ஃபலஸ்தீனில் வீசிய இன்திபாழாவை (மக்கள் எழுச்சிப்போராட்டத்தை) சீர்குலைத்து கருணைக் கொலைச் செய்யும் வெடிக்குண்டுதான் அமெரிக்காவின் தலைமையில் யாஸிர் அரஃபாத்தும், இட்சக் ரபீனும் 1993-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஓஸ்லோ ஒப்பந்தம் என்று ஃபலஸ்தீன் நேசனல் இன்ஷியேடிவ் பொதுச் செயலாளர் முஸ்தஃபா பர்குதி தெரிவித்துள்ளார்.

7-வது அல்ஜஸீரா ஃபாரத்தில் ‘ஓஸ்லோ ஒப்பந்தம்-20 ஆண்டுகளுக்கு பிறகு’ என்ற கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
மேலும் அவர் கூறியது: ஐந்து ஆண்டுகள் நீண்ட இன்திபாழாவை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஃபலஸ்தீன் ஆணையத்தை உருவாக்க வழி வகுத்த ஓஸ்லோ ஒப்பந்தம் இஸ்ரேலைப் பொறுத்தவரை வெற்றிகரமானது. அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் ஃபலஸ்தீன் மக்களுக்கு பெரும் பின்னடைவை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியது. 20 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்றிலேயே மிகவும் பயங்கரமான இனவெறியின் அடிப்படையிலான அரசு இன்று இஸ்ரேலில் உள்ளது.
வலுவான மக்கள் எழுச்சி, ஃபலஸ்தீன் மக்களிடையே ஐக்கியம், இஸ்ரேலுக்கு எதிரான முழுமையான புறக்கணிப்பு, வேலையில்லாத்திண்டாட்டத்திற்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பொருளாதார திட்டம் தயாரித்தல் ஆகியன ஃபலஸ்தீன் முன்னால் உள்ள வழிகள் ஆகும். அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள அதிகாரம் உள்ளது. ஆயுதப் போராட்டமும், வெகுஜன போராட்டமும் பரஸ்பரம் சமரசம் செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு முஸ்தஃபா பர்குதி கூறினார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக