வியாழன், மார்ச் 28, 2013

தீவிரவாதி கைது நாடகம்: டெல்லி ஸ்பெஷல் பிரிவுக்கு மேலும் பின்னடைவு!

கஷ்மீர் அரசின் ‘சரண்ட அண்ட் ரிஹாபிலிஷேசன் பாலிசி’யின் படி அனுமதி கிடைத்து சரணடையவந்த முன்னாள் ஹிஸ்ப் கமாண்டர் லியாகத் அலி ஷாவை டெல்லியை தகர்க்க வந்த தீவிரவாதி என்று கைது செய்து போலி நாடகமாடிய டெல்லி ஸ்பெஷல் பிரிவின் பொய்களை உறூதிச்செய்யும் விதமாக இதுக்குறித்து எவ்வித தகவல்களையும் அளிக்கவில்லை என்று இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இண்டலிஜன்ஸ் பீரோ உள்ளிட்ட உளவுத்துறை ஏஜன்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே லியாகத் அலி ஷாவை கைதுச் செய்ததாக டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு முன்னர் தெரிவித்தது. இண்டலிஜன்ஸ் பீரோ எவ்வித தகவலையும் அளிக்கவில்லை என்ற செய்தி வெளியானபோது தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் லியாகத் அலி ஷாவை கைது செய்ததாக டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் பல்டியடித்துள்ளார்.
டெல்லி போலீஸ் கூறும் ரகசிய விபரங்களின் அதிகாரப்பூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள கஷ்மீர் மாநில போலீஸ், லியாகத் தங்களின் உத்தரவின் பேரிலேயேசரணடைய வந்தார் என்று கூறியதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக