- டெல்லியில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 359 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது என்று அதிர்ச்சியடைந்துள்ளனர் பெண்கள்.
- தேசிய குற்றப்பதிவேடு துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் இளம் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2012ல் பதிவான பாலியல் வழக்குகள் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களிடையே பெண்களுக்கு எதிரான 143 கற்பழிப்பு வழக்குகள், 113, மானபங்க வழக்குகள் பதிவாயின. பலாத்கார வழக்கு இருமடங்கானது இந்த வருடம் ஜனவரி - மார்ச் கட்டங்களில் 359 பாலியல் பலாத்கார வழக்குகளும், 794 மானபங்க வழக்குகளும் பதிவாகியுள்ளன.
- மானபங்க வழங்கு 6 மடங்கு கடந்த ஆண்டைவிட பாலியல் பலாத்கார வழக்குகள் இருமடங்கை விட அதிகமாக பதிவாகியுள்ளது. அதேபோல் மானபங்க வழக்குகள் 6 மடங்கை காட்டிலும் அதிகமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2010ல் 706 பலாத்கார வழக்கு கடந்த 2010-ம் ஆண்டு 706 கற்பழிப்பு வழக்குகள் பதிவானதே கடந்த 10 வருடங்களில் அதிகபட்ச அளவாக இருந்து வந்தது. இப்போது அதை மிஞ்சும் வகையில் மூன்றே மாதங்களில் 359 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது.
ஞாயிறு, மார்ச் 31, 2013
3மாதத்தில் 359 கற்பழிப்பு வழக்குகள் … அதிர்ச்சியில் இளம்பெண்கள் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக