வியாழன், மார்ச் 14, 2013

! டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவியின் பெயரை ரெயிலுக்கு வைக்க முடிவு !

புதுடெல்லியில் கடந்த டிசம்பர் மாதம், 23 வயது கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். கடுமையான போராட்டத்திற்கு பிறகு, தாக்கப்பட்டு, கெடுத்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் சிங்கப்பூரில் இறந்துபோனார்.


இதனால், எழுந்த போராட்டத்தால் நாடு ஸ்தம்பித்து போனது. இவ்விசயம் உலக முழுவதும் உள்ள பெண்களால் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் 19 புதிய ரெயில்கள் விடப்படும் என்று மந்திரி பவன் குமார் பஞ்சால் அறிவித்தார். இதில் சாப்ரா ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரெயிலானது, டெல்லியில் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த கல்லூரி மாணவியின் சொந்த ஊரான உத்தரப்பிரதேச பல்லியா நகர் வழியாக தலைநகர் டெல்லிக்கு வருகிறது.

இந்த ரெயிலுக்கு இறந்த மாணவியின் ஞாபகமாக ”நிர்பயா” அல்லது ”பேடி” என்று விரைவில் பெயர் வைக்கப்படும் என்று தெரிகிறது. பல்வேறு வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக