சனி, மார்ச் 23, 2013

தற்கொலையை கொலை வழக்காக்கும் காவல்துறை - சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கை காவல்துறை திசை திருப்புவதாகவும், இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அபு பைசல் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 16-03-2013 அன்று ஜானகி ராமன் என்ற ஓடுனர் 8 வயது முஸ்லிம் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டுள்ளனர்.

அதனை எதிர்கொள்ள முடியாமல் தனது எஜமானன் வீட்டில் ஓடி ஒளிந்த ஜானகி ராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உண்மை நிலை இப்படியிருக்க, கீழக்கரை காவல்துறை அதனை தற்கொலை வழக்காக பதிவு செய்யாமல் கொலை வழக்காக பதிவு செய்து அப்பகுதி மக்களை அலைக்கழித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மீது கொலை வழக்கை பதிவு செய்து முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது கீழக்கரை காவல்துறை. இதனை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

கீழக்கரை காவல்துறை தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கை கடைபிடிப்பதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக