முஸ்லிம்களின் புனிதக் கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான முஸ்லிம்கள் சவூதி அரேபியாவின் மக்கா நகரில் குழுமி அக்கடமையை நிறைவேற்றுகிறார்கள்.
மிக அதிகமாக மனிதர்கள் கூடும் இந்நிகழ்வில், பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு நாட்டிலுமிருந்து இத்தனை எண்ணிக்கை அளவீட்டில் தான் ஹஜ்ஜுக் கடமையாற்ற வரலாம் என்று சவூதி அரேபிய அரசு வரையறை வைத்துள்ளது.
உலகில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுள் ஒன்றான இந்தியாவில் இருந்து இலட்சத்து அறுபதாயிரம் பேர் ஹஜ்ஜு செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்திய முஸ்லிம்கள் அதிக அளவில் ஹஜ் செய்ய விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அளவீட்டை அதிகரிக்க வேண்டும் என்று சவூதி அரேபிய அரசை இந்திய அரசு கோரி வந்தது. இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுள்ள சவூதி அரசு 2013ல், கூடுதலாக மேலும் பத்தாயிரம் பேர், மொத்தத்தில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் இந்தியர்கள் இந்தியாவிலிருந்து ஹஜ் செய்ய வரலாம் என்று அனுமதிஅளித்துள்ளது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக