திங்கள், மார்ச் 25, 2013

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மறைத்த சி.பி.ஐ!

புதுடெல்லி: சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான கலவரத்தைத் தொடர்ந்து நடந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்த சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் இருந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளது.

1993-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை நடந்த 19 தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்தது. ஒவ்வொரு குண்டுவெடிப்புகள் நடந்த தேதியும் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. 1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு முதல் டெல்லியில் நடந்த இஸ்ரேல் தூதரக வாகனக் குண்டுவெடிப்பு வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஏராளமானோர் கொல்லப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான், அஜ்மீர் தர்கா, மொடாஸா ஆகிய குண்டுவெடிப்புகளை சி.பி.ஐ இப்பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை. ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வேண்டுமென்றே சி.பி.ஐ மூடி மறைத்துள்ளது. மேலும் சி.பி.ஐ தாக்கல் செய்த பட்டியலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை முஸ்லிம்கள்தாம் நடத்தினார் என்பதற்கு போதிய ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக