தோஹா: பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளில் அல்ஜஸீரா புதிய 2 தொலைக்காட்சி சானல்களை துவக்குகிறது. அல்ஜஸீரா யு.கே என்று பெயர் சூட்டப்பட்ட சானலுக்கு விரிவான நெட்வொர்க்கை உருவாக்குவதாக அல்ஜஸீராவின் சானல் இயக்குநர் ஷேக் அஹ்மத் பின் ஜாஸிம் அல் தானி தெரிவித்துள்ளார்.
ஏழாவது அல்ஜஸீரா ஃபாரத்தின் முடிவில் அஹ்மத் பின் ஜாஸிம் இந்த அறிக்கையை வெளியிட்டார். பிரிட்டனில் நடக்கும் நிகழ்வுகளை தொகுத்து ஐந்து மணிநேர நிகழ்ச்சியை அல்ஜஸீரா ஆங்கில சானலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிரெஞ்சு சானல் துவங்குவதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்துவதே லட்சியம் என்று அஹ்மத் பின் ஜாஸிம் கூறினார்.
2011-ஆம் ஆண்டு அல்ஜஸீரா பால்கன் என்ற பெயரில் போஸ்னியாவின் தலைநகர் ஸரயாவோவில் துவக்கிய சானலை துருக்கி மொழியில் ஒளிபரப்பவும் திட்டமுள்ளது. 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அல்ஜஸீரா நிறுவனம் அமெரிக்காவின் கரண்ட் டி.வியை விலைக்கு வாங்கியது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக