புதுடெல்லி:இந்திய மீனவர்களை சுட்டுக் கொலைச் செய்த இத்தாலி கடற்படையினரை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவர கோரி இத்தாலி தூதரகத்தை நோக்கி சோசியல்டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா நடத்திய பேரணியின் படம் அந்நாட்டின் செய்தி நிறுவனமான அன்ஸாவில் வெளியாகியுள்ளது. கடற்படையினரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்புவதாக கூறும் செய்தியுடன் எஸ்.டி.பி.ஐ நடத்திய பேரணியின் படமும் வெளியாகியுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ பேரணியை நடத்தியது.தீன்மூர்த்தி சவுக்கில் துவங்கிய பேரணியை சாணக்யபுரி போலீஸ் ஸ்டேசனின் முன்னால் போலீஸ் தடுத்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தேசிய பொதுச் செயலாளர்களான எ.ஸயீத், ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் ஆகியோர் பேரணிக்கு தலைமை தாங்கினர். இப்படத்தை அல்ஜஸீரா இணையதளமும் வெளியிட்டிருந்தது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக