சனி, மார்ச் 16, 2013

இத்தாலி தூதர் இந்தியாவை விட்டு வெளியேற தடை!

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள இத்தாலியத் தூதர் , டேனியல் மான்சினி, இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்திருக்கிறது.

கடந்த ஆண்டு கேரள கடற்பரப்புக்கு அப்பால் இரு இந்திய மீனவர்கள் இரண்டு இத்தாலியக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட படையினரை, இந்தியாவுக்கு விசாரணைக்காக திரும்ப அனுப்ப இத்தாலி மறுத்ததை அடுத்து இந்த உத்தரவு வருகிறது.
இந்திய உச்ச நீதிமன்றம் இந்த இரு கடற்படையினரையும் இத்தாலியில் நடந்த பொதுத்தேர்தலில் வாக்களிக்கச் சென்று வர அனுமதி அளித்திருந்தது. அவர்கள் இந்த வாக்குப்பதிவு முடிந்தவுடன் இந்தியா திரும்பவேண்டும் என்று உறுதிமொழியைப் பெற்ற பின்னர் நீதிமன்றம் அவர்கள் இத்தாலி செல்ல அனுமதித்திருந்தது. இந்த சம்பவம் இந்தியக் கடற்பரப்புக்குள் நடந்ததாக இந்தியா கூறுகிறது.
இத்தாலியின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். இதனால் இரு தரப்பு உறவுகளில் பின் விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
அதேசமயம், இந்திய மீனவர்களை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இத்தாலிய கடற்படையினர் மீண்டும் இந்தியா திரும்புவார்கள் என்று இந்திய உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த இந்தியாவுக்கான இத்தாலிய தூதரை கைது செய்வதற்கு வழி இருக்கிறது என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டங்களுக்கான பேராசிரியர் டேவிட் அம்புரோஸ்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக