புதன், மார்ச் 27, 2013

சரணடைய வந்தவரை தீவிரவாதி என்று சொல்வதா?: ஒமர் அப்துல்லா கண்டனம் !

டெல்லியில் கைது செய்யப்பட்ட லியாகத் அலி ஷா, அங்குள்ள வணிக வளாகத்தினுள் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வந்ததாக டெல்லி போலீசார் கூறுகின்றனர். இந்தக் கூற்றை காஷ்மீர் போலீசார் மறுக்கின்றனர். 

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கி இன்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் மந்திரி உமல் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். 

தீவிரவாதத் தாக்குதல் நடத்த வரும் நபர், தனது குடும்பத்தையும் உடன் அழைத்துக் கொண்டு வருவாரா என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற ஒமர், கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு லியாகத் அலி ஷா டெல்லிக்கு வரவில்லை என்றும், மாறாக, தனது மனைவி மற்றும் மகளின் கரங்களைப் பிடித்தபடி வந்துள்ளார் என்றும் கூறினார். 

மனைவி- மகளுடன் சரணடைய வந்தவரை தீவிரவாதி என்று சொல்வதா? என்றும் ஒமர் கேள்வி விடுத்துள்ளார்.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக