உத்தரபிரதேசத்தில் உள்ள தாருல் உலூம் நட்வட்டுல் உலமா சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அகிலேஷ் யாதவ், 'தவறான வழக்குகளில் சேர்க்கப்பட்டு தீவிரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. சிறுபான்மையினத்தவரின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபட எனது அரசு உறுதி பூண்டுள்ளது.
கடந்த ஓராண்டாக நிகழ்ந்த சமுதாய கலவரங்கள் எனது அரசின் மீது விழுந்த கரும்புள்ளியாக உள்ளது. எதிர்காலத்தில் இதைப்போன்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க தேவையான அனைத்தையும் செய்வேன்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக