புதன், மார்ச் 27, 2013

தலிபான் போராளிகள் தாக்குதலில் ஒரு பிரிட்டிஷ் வீரர் பலி: 9பேர் காயம் !

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்டு பகுதியில், பணியில் இருந்த ரோந்துப் படையினரின் மீது, திங்கள் அன்று இரவு , தாலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகள் அடங்கிய லாரியுடனும், ஆயுதங்களுடனும் வந்த போராளிகள்  நடத்திய தாக்குதலில், ஒரு பிரிட்டிஷ் வீரர் பலியானதோடு 9 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் ஆப்கானிஸ்தான் படையினரும் அடங்குவர்.. செவ்வாயன்று மீண்டும் ஜலாலாபாதின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தை, 8 பேர் அடங்கிய தற்கொலைப் படையினர் தாக்கியதில் 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 


அமெரிக்காவின் ராணுவப்படையினை அந்நாடு ஆப்கானிஸ்தானில் இருந்து அடுத்த வருடம் அழைத்துக் கொள்ள இருகின்றது. அமெரிக்க நாட்டின் பொதுக் காரியதரிசி ஜான் கெர்ரி, ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமித் கர்சாயை சந்தித்து இரு நாடுகளின் உறவுகள் குறித்து பேசுவதற்காக வந்திருக்கும் இந்த சமயத்தில், போராளிகளின் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த இரு தாக்குதல்களும், தனியே செயல்படவிருக்கும் ஆப்கானிஸ்தானின் காவல்துறைக்கு பெரும் சவாலாக விளங்கக்கூடும்.

1


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக