ஜெனிவா : இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. 13 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்துள்ள நிலையில் 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது.
25 வாக்குகள் பெற்று ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. 13 வது சட்ட திருத்தத்தை அமல் படுத்த வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்து ராணுவத்தை அப்புறப் படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட இந்தியா திருத்தங்கள் எதையும் வலியுறுத்த வில்லை.
முன்னதாக தீர்மானத்தை நிராகரித்துப் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் சமரசிங்கே '' அமெரிக்கா கூறும் புகார்களில் உண்மையில்லை என்றும் இன்று எங்களுக்கு எதிராக கொண்டு வந்தது போன்று நாளை வேறு எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் வரலாம் என்று தெரிவித்தார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக